அடிக்கிற அடியில் (இடைத்தேர்தல்)…. வேளாண் சட்டம் வாபஸ் – விவசாயி எடப்பாடி எங்கே?

அடிக்கிற அடியில் (இடைத்தேர்தல்)…. வேளாண் சட்டம் வாபஸ் – விவசாயி எடப்பாடி எங்கே?

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட்டை தொலைத்த பாஜக பதறிப் போய் பெட்ரோல், சமையல் எண்ணெய் விலையை குறைத்தது. தற்போது ஐந்து மாநில தேர்தலை மனதில் கொண்டு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அனைத்து விவசாய  சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.
ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். எனவே அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுகிறோம். வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்டம் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகைையால், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை பார்லிமெண்டில் ஆதரித்து ஓட்டுபோட்டதுடன், நான் ஒரு விவசாயி, வேளாண் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜகவை விட பெருங்குரல் எடுத்து கூவிய எடப்பாடி பழனிசாமியை இதுவரை காணோம்.

அரசியல் செய்திகள்