அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள் – வைகோ

அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள் – வைகோ

நான் கட்சி மாச்சரியங்களைக் கடந்து, ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களோடு ஐந்து மாவட்டங்களிலும் முல்லைப் பெரியாறைப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனத்தை இழக்கும் என்ற பிச்சாரத்தை முன்வைத்து மக்களைத் திரட்டினேன். கட்சிக் கொடி கட்டாமல் பொதுமக்களை, விவசாயிகளைத் திரட்டினேன். விழிப்புணர்வு ஏற்பட்டது. நான்கு முறை உண்ணாவிரத அறப்போர் நடத்தினேன். கேரளத்திற்குச் செல்லுகின்ற 13 சாலைகளையும், இரண்டு முறை தடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினேன்.

இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலைக்கு, தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. முல்லை பெரியாறு பிரச்சினையைப் பற்றி அகரம் கூடத் தெரியாத அண்ணாமலைகள், என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

அரசியல் செய்திகள்